

சென்னை,
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், புதிய தவெக அரசின் நல்ல தூய முயற்சிக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு அளிக்கும் என ஜி.கே,வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட்ட அறிக்கையில்,
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். காமராஜர், மூப்பனாரின் எண்ணங்களுக்கு ஏற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன்.
60 நாண்டுகளுக்கு பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக தவெக ஆட்சி உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமாகா ஆதரவு வழங்கும் என அதில் கூறியுள்ளார்.