2 தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்துள்ளன.
2 தொகுதி இடைத்தேர்தல்: கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
Published on

சென்னை,

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படுகிறார்கள்.

சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்களை அறிவித்து, அறிமுக கூட்டம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர்கள் வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு). சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com