

சென்னை,
மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறைவில் 85.97 சதவிகித வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அ.தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற மரகதம் கும் ரவேல், சத்தியபாமா ஆகி யோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 முதல் 16-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி. மு.க.), சுகந்தி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு), ஜானகிராமன் (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேட்சைகள் உள்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தாராபுரம் தொகு தியில் சத்தியபாமா (த. வெ.க.),சுகன்யா(தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.),லட் சுமணன் (இந்திய கம்யூ னிஸ்டு கட்சி), கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) மற்றும் சுயேட்சைகள் உள்பட 22 பேர்களம் காண்கின்றனர். இந்தத் தொகுதிகளில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு
நிறைவு பெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை அசம்பாவிதமின்றி நிறைவு பெற்றது.
இந்தநிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு சதவிகித விவரங்கள் வெளியாகியுள்ளன. மதுராந்தகம்,தாராபுரம் தொகுதிகளில் பொதுத்தேர்தலை விட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்த நிலவரப்படி 80.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரத்தில் 6 மணி நிலவரப்படி 89.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 85.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 92.28 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த தேர்தலில் 6.38 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9 -ல் எண்ணப்படுகின்றன