வெவ்வேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்ய முடியாதா? தமிழக அரசு விளக்கம்

கலப்பு திருமணம் செய்தால் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாக கூறப்படுகிறது.
வெவ்வேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்தால் பதிவு செய்ய முடியாதா? தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

நடிகர் அமீர், நடிகை பாவ்னி ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் செல்லுப்படியாகாது என்றும், வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்தால் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவு செய்ய முடியாது என்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். இருவேறு மதத்தினர் கலப்பு திருமணம் செய்துகொள்வதற்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதி உள்ளது. அதில் வகுக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதுபோல் நடைபெறும் திருமணங்கள் தமிழ்நாடு அரசின் பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com