தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் ரத்து செய்தது சரிதான்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

தமிழக அரசு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் மனோன்மணி உள்பட நான்கு பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் ரத்து செய்தது சரிதான்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் எனக் கூறி 26 பேராசிரியர்கள் கொண்ட பட்டியலை தயாரித்த தமிழக அரசு ஆட்சேபனை கோரியது. ஆனால், ஆட்சேபனைகள் தெரிவிக்கும் முன்பே 14 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்து, 2024 அக்டோபர் 3ம் தேதி அரசு உத்தரவிட்டது.

அரசு உத்தரவை எதிர்த்து பேராசிரியர் மனோன்மணி உள்பட நான்கு பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனோன்மணி தரப்பு வாதத்தை ஏற்று 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், 14 பேரின் நியமன உத்தரவை, தனி நீதிபதி ரத்து செய்தது சரி என்று கூறி, மேல் முறையீட்டு மனுக்களை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நான்கு வாரங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து, நியமனம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்ன ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com