மின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி

ரெயில்கள் ரத்தால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
மின்சார ரெயில்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி
Published on

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புறநகர் ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, இன்று அலுவல் தினம் என்பதால், அலுவலகங்களுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ரெயில்கள் ரத்து எதிரொலியாக பஸ் நிலையங்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனால் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக போலீஸ் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அலுவலகங்களுக்கு விரைவாக செல்ல முடியவில்லை என்றும், பேருந்துகளில் பயணம் செய்ய அதிக நேரம் ஆவதால், வீட்டில் இருந்து முன்கூட்டியே புறப்பட வேண்டியுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com