

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட பிப். 21ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் கட்சிகளிலேயே 'ப்ளாக்செயின்' தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விருப்ப மனுக்களை பெறும் கட்சி என்பதில் பெருமை அடைகிறோம் என்றும் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.