அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
அய்யப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
Published on

ஆலங்குடியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குத்துவிளக்கு பூஜையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து அய்யப்ப சுவாமிக்கு மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 251 பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com