“மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

பெரியார் குறித்து கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
“மன்னிப்பு கேட்க முடியாது” - ரஜினிகாந்துக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
Published on

சென்னை,

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக தான் எதுவும் கூறவில்லை என்றும் அதனால் தனது பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. #மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளமான டுவிட்டரில் தற்போது தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம் பலர், நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுபோல #சூப்பர் சங்கி ரஜினி என்ற ஹேஸ்டாக்கில் ஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com