திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அண்ணன், தங்கை பலி

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதி அண்ணன், தங்கை பலியானார்கள்.
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அண்ணன், தங்கை பலி
Published on

திருவள்ளூரை அடுத்த பாக்கம் அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் குணசுந்தரி (வயது 50). இவர் தனது சகோதரர் முருகன் (45) என்பவருடன் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். கோவில் விழாவை முடித்த பின்னர் நேற்று முன்தினம் இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையான காக்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னாள் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்கள்.

இந்த விபத்தை கண்ட கார் டிரைவர் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். பலத்த காயமடைந்த 2 பேரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குணசுந்தரி மற்றும் அவரது தம்பி முருகன் பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமை சேர்ந்த பார்த்திபன் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்து சம்பந்தமாக தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com