கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்

கார்-லோடு ஆட்டோ மோதல்; 4 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே கார்-லோடு ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

கடையநல்லூர்:

மதுரை ராமமூர்த்தி காம்பவுண்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி லதா பிரியா (33), மகள் முத்துமீனா (8) ஆகியோருடன் காரில் குற்றாலத்துக்கு சுற்றுலா வந்தார். காரை செந்தில்குமார் ஓட்டினார். கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த காரும், செங்கோட்டையில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் காரில் இருந்த லதா பிரியா, அவருடைய மகள் முத்துமீனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். லோடு ஆட்டோ டிரைவர் செங்கோட்டை ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்த சேகர் (42) படுகாயம் அடைந்தார். மேலும் கிளீனர் ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாறைப்பட்டியை சேர்ந்த சப்பானிக்கு (45) காலில் முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்த 4 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com