

சென்னை,
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;-
“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது பற்றி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்களுக்கு ஒரு விஷயத்தை தெளிவுபத்த விரும்புகிறேன். எந்த எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் சொந்தமாக வழங்கப்படாது.
அது யாருடைய சொந்த காரும் கிடையாது. 5 வருடங்கள் பயன்படுத்துவதற்குதான் கார் வழங்கப்படும். 5 ஆண்டுகள் முடிந்ததும் கார் திரும்ப பெறப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.