பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே விட்டம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விட்டம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள புதர்மறைவில் பணம் வைத்து சூதாடிய ரவிக்குமார் (வயது 22), ரங்கசாமி (47), செந்தில் (35), விஜயகுமார் (43) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com