நிலத்தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த சாமன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் திம்மன் (வயது 75). இவருக்கும், மல்லுபட்டியை சேர்ந்த திம்மனின் அண்ணன் மகன் ராஜா (54) என்பவருக்கும் சாமன்கொல்லையில் உள்ள நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதுகுறித்து திம்மன் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, அவருடைய மனைவி ரத்தினம்மாள் (50), மகன்கள் பரமசிவம் (28), சிவராஜ் (30) ஆகியோர் நேற்று காலை சாமன்கொல்லையில் திம்மனின் நிலத்தில் இருந்த பலா, ஜம்பு, நாவல் மரங்களை வெட்டியும், பொக்லைன் மூலம் நிலத்தில் குழி தோண்டியதாக தெரிகிறது. இதனை தட்டிகேட்ட திம்மனை உருட்டுகட்டை மற்றும் கொடுவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து திம்மன் கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் ராஜா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com