நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல் அண்ணி உள்பட 4 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் விவசாயி மீது தாக்குதல் அண்ணி உள்பட 4 பேர் மீது வழக்கு
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). விவசாயி. இவருக்கும், இவருடைய அண்ணன் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடராஜன் பிரச்சினைக்குரிய நிலத்தின் வழியாக சென்றார். அப்போது அங்கு சென்ற அண்ணன் மனைவி கண்ணம்மாள் (57), இவருடைய மகன்கள் சுரேஷ், ரமேஷ், அருண்குமார் ஆகியோர் சேர்ந்து நடராஜனை தாக்கினர். இதில் காயம் அடைந்த நடராஜன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் ஆயில்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்து கண்ணம்மாள் உள்பட 4 பேரை தேடி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com