4 பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
4 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை அருகே உள்ள நடுவக்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த செந்தூர், செந்தில், குமார், சுந்தர் ஆகியோருக்கும், வேல்முருகனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் வேல்முருகனை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை தாலுகா போலீசார், செந்தூர், செந்தில், குமார், சுந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com