4 பேர் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
4 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தாமரைச்செல்வி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் நெல்லையப்பன் (வயது 43). தொழிலாளி. இவருக்கும் இட்டேரி பகுதியை சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் சங்கரநாராயணன், வேல்முருகன், நயினார் மற்றும் ஒருவர் சேர்ந்து நெல்லையப்பன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார், சங்கரநாராயணன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com