தாயை தாக்கிய மகன் உள்பட 5 பேர் மீது வழக்கு

நெல்லை அருகே தாயை தாக்கிய மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாயை தாக்கிய மகன் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

நெல்லை அருகே சிவந்திபட்டி இந்திராநகரை சேர்ந்தவர் வேலு மனைவி மாடத்தி (வயது 67). இவருக்கு முத்துகுமார், மனோகரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மாடத்திக்கு சொந்தமான இடத்தை மகன்களுக்கு பிரித்து கொடுத்து விட்டாராம்.

இந்த நிலையில் முத்துகுமாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து பியூஸ் கேரியரை மனோகரன் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மனோகரனிடம் மாடத்தி கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மனோகரன், அவருடைய உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராமர் உள்பட 5 பேர் சேர்ந்து மாடத்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாடத்தி சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com