போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக பேரணியாக சென்ற பா.ஜ.க.வினர் மீது வழக்கு

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக பேரணியாக சென்ற பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் விதமாக பேரணியாக சென்ற பா.ஜ.க.வினர் மீது வழக்கு
Published on

75-வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடும் வகையில் பா.ஜ.க.வினர் நேற்று திருமங்கலம் சிக்னல் முதல் பாடி மேம்பாலம் வரை பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில் தேசியகொடியுடன் பேரணியாக சென்றனர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கருதிய திருமங்கலம் போலீசார், பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com