

சென்னை,
போடிநாயக்கனூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.-வும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து, மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ ஓ.பன்னீர் செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
பின்னர் அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி பி.பி.பாலாஜி, எம்.எல்.ஏ. ஓ.பன்னீர் செல்வத்தின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.