அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கினை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவினை கடந்த நவம்பர் 11ம் தேதி அமைத்து உத்தரவிட்டது

இந்தசூழலில் சூரப்பா அப்பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய பெஞ்ச், ஐ.ஐ.டி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிகளுக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com