மின்கம்பங்களை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு

தேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மின்கம்பங்களை சேதப்படுத்திய டிரைவர் மீது வழக்கு
Published on

வடுகப்பட்டியில் இருந்து வெள்ளைப்பூண்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல் பழைய பாளையத்தை சேர்ந்த தங்கராஜன் (வயது 40) ஓட்டினார். மேல்மங்கலம் வைகை அணை ஒத்தவீடு சாலையில் தனியார் கிரசர் அருகே சென்றபோது லாரியில் அதிக உயரத்தில் ஏற்றப்பட்ட மூட்டைகள் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் உரசியது. இதில் அப்பகுதியில் உள்ள 6 மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பெரியகுளம் உதவி மின்பொறியாளர் ஜெயகரன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுதேவதானப்பட்டி அருகே மின்கம்பங்களை சேதப்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com