பிளஸ்-1 மாணவியை துன்புறுத்திய 2 பெண் வார்டன்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு விமான பணிப்பெண்ணின் மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
2 பெண் வார்டன்கள் மீது வழக்குப்பதிவு.
Published on: 

விமான பணிப்பெண்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய 16 வயது மூத்த மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பிளஸ்-1 மாணவியை துன்புறுத்திய 2 பெண் வார்டன்கள் மீது வழக்கு

இவருக்கு வார்டன்கள் அமலா, ஜோதி ஆகியோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். மேலும் அவரை தவறாகச் சித்தரித்து அவதூறாகப் பேசியுள்ளனர். இதுகுறித்து விமான பணிப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் 2 பெண் வார்டன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X