வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து டிவி, பைக் சேதம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு


வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து டிவி, பைக் சேதம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Jan 2026 8:13 PM IST (Updated: 17 Jan 2026 8:22 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரில் பைக் தர மறுத்த ஒரு வாலிபரை 7 பேர் சேர்ந்து அவதூறு வார்த்தைகளால் பேசி, கை மற்றும் மதுபாட்டினால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் டவுண் மாதா நடுத்தெருவைச் சேர்ந்த உஸ்மான் மகன் சையது அலி (வயது 37). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் மகாராஜன்(எ) மூக்கன்(22), ஜெயப்பிரகாஷ் தெருவை சேர்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(22), தென்திருப்பேரியை சேர்ந்த மாசானஇசக்கி மகன் உச்சினிமகாளி(21), டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ்(22), சாந்திநகரை சேர்ந்த நாகராஜன் மகன் சஞ்சய்(19), டவுண் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது யூசுப், டவுண் முகமது அலி தெருவை சேர்ந்து பரமசிவன் மகன் பாலமுருகன்(19) ஆகிய 7 பேர் சேர்ந்து இருசக்கர வாகனத்தை கேட்டுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை தர சையது அலி மறுத்த காரணத்தினால், அவதூறு வார்த்தைகளால் பேசி, கை மற்றும் மதுபாட்டினால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி, சையது அலி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, டிவி, பைக், செல்போன் ஆகியவற்றை மேற்சொன்ன 7 பேர் சேர்ந்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சையது அலி கொடுத்த புகாரின் பேரில் மேற்சொன்ன 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story