படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என வழக்கு: நடிகர் சிவாஜியின் மகன் - பேரனுக்கு நோட்டீஸ்

கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் நடிகர் சிவாஜிகனேசனின் மகன் ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
படம் தயாரிக்க வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என வழக்கு: நடிகர் சிவாஜியின் மகன் - பேரனுக்கு நோட்டீஸ்
Published on

சென்னை,

நடிகர் விஷ்னு விஷால் நடித்த ஜகஜால கில்லாடி படத்தினை தயாரிப்பதற்காக வாங்கிய ரூ.4 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் நடிகர் சிவாஜிகனேசனின் மகன் ராம்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த், ஈசன் புரொடக்ஷன் நிறுவனத்திற்கும் சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com