ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கு தள்ளுபடி

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
 ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கபட்ட புகாரின் பெயரில் விசாரனை நடத்திய தேசிய உரிமைகள் ஆணையம். சென்னை காவல் ஆணையரின் அறிக்கை கோரியது.

இதனை தொடர்ந்து ஆணையர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முடிவுக்கு வந்த ஆணையம். வழக்கை கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முடித்து வைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் எந்த விசாரணையும் நடத்தாமல் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் ராம்குமாரின் மரணம் குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உத்தரவு இட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஆணையம் புலன் விசாரணை அறிக்கை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரின் அறிக்கை அடிப்படையிலும் ராம்குமார் தற்கொலை செய்தது உறுதியானதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சரிதான் எனவும் அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com