சிறுமிகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

சிறுமிகள் 3 பேர் குளிப்பதை வாலிபர் ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read
குடும்ப தகராறில் காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி
கோப்புப்படம்

இதனை அறிந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உதயகுமாரின் செல்போனில் தவறான பதிவுகள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read
ஓடும் பேருந்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com