மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.4 ஆயிரம் நிதி உதவி கேட்டு வழக்கு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை

மூன்றாம் பாலினத்தவருக்கு ரூ.4 ஆயிரம் நிதி உதவி கேட்ட வழக்கு தொடர்பாக, ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரேஸ்பானு. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது 3-ம் பாலினத்தவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. எனவே, ரேசன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத 3-ம் பாலினத்தவர்களுக்கும், ரூ.4 ஆயிரம் நிவாரண உதவியை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com