உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி

உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி
Published on: 

கரூர் மாவட்டம் மரவாபாளையம், கவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், வடுகபட்டி, குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பழமாபுரம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஜவ்வரிசி தயாரிக்கும் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8ஆயிரத்திற்கும், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.9ஆயிரத்திற்கு விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com