வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி
Published on

மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், புன்னம், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையானது. சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com