அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு

அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
Published on

அரியலூரில், மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு போக்குவரத்து துறை அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான சிவசங்கர் மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com