செல்போன் கடையில் திருடியவர் கைது

சங்கரன்கோவிலில் செல்போன் கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் கடையில் திருடியவர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் அஜித் குமார் (வயது 28). இவர் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த மர்மநபர் ஒருவர், பழைய செல்போன் கேட்டுள்ளார். அப்போது கடையில் இருந்த செல்லத்துரை, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காண்பித்துள்ளார். அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் வரவே அவரிடம் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது அந்த மர்ம நபர் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன் (19) என்பவர் செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com