முதியவர்களிடம் செல்போன்கள் பறிப்பு

மதுரையில் முதியவர்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.
முதியவர்களிடம் செல்போன்கள் பறிப்பு
Published on

மதுரை,

மதுரை திருநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 57). சம்பவத்தன்று இவர் பாத்திமா கல்லூரி முன்பு பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று கணபதி வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

பின்னர் அவர்கள் தத்தனேரி வழியாக செல்லும் போது கொன்னவாயன் சாலையை சேர்ந்த சேகர் (61) என்பவரிடம் செல்போன் பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து அவர்கள் இருவரும் செல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com