செல்போன்கள், மடிக்கணினிகள் திருட்டு

தஞ்சையில் மாணவர்கள் விடுதியில் செல்போன்கள், மடிக்கணினிகள் திருட்டு போனது.
செல்போன்கள், மடிக்கணினிகள் திருட்டு
Published on

வல்லம்;

தஞ்சை அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த சாய்கிருஷ்ணா(வயது20), சாய்வர்தன்(20) மற்றும் கணேஷ் (20) ஆகியோர் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் பல்கலைக்கழகத்திற்கு எதிர்புறம் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு போதுமான காற்று இல்லாததால் தங்களது அறை கதவை பூட்டாமல் மாணவர்கள் படுத்து தூங்கினர்.மறு நாள் காலை மாணவர்கள் கண் விழித்து பார்த்த போது அறையில் இருந்த விலை உயர்ந்த 2 செல்போன்கள், 3 மடிக்கணினிகள் மற்றும் ரூ.5000 இருந்த பணப்பை திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.3.80 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் மாணவர் சாய்கிருஷ்ணா புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், மடிக்கணினியை திருடி சன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com