

தென்காசி,
தெற்கு ரெயில்வேயின் கீழ் வரும் சோழபுரம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் ரெயில் நிலையங்கள் அமைக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை-செங்கோட்டை ரெயில் வழித்தடத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் செயல்பட்டு வந்த கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களும் அகல ரெயில் பாதை மாற்றத்தின்போது அகற்றப்பட்டன.
இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ரெயில் நிலையங்களை அமைக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அப்பகுதி மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூர் மக்களின் போக்குவரத்து வசதி மேம்படுவதோடு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கான நேரடி ரெயில் இணைப்பும் எளிதாகும். புதிய ரெயில் நிலையங்கள் அப்பகுதியின் வணிகம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.