நம்பிக்கை மையத்திற்கு தரச்சான்று

கிருஷ்ணாபுரம் நம்பிக்கை மையத்திற்கு தரச்சான்று வழங்கப்பட்டது.
நம்பிக்கை மையத்திற்கு தரச்சான்று
Published on

வேப்பந்தட்டை:

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய அளவிலான எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களுக்கு பாராட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மையத்திற்கு பாராட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நேரு கலந்து கொண்டு, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பாரதி பிரியாவிடம் தரச்சான்றிதழை வழங்கினார். இதில் மருத்துவமனையின் ஆய்வக நுட்புனர் ஜஸ்டின் தினகரன், ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com