7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந்தேதி (திங்கட்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி, இன்றும், நாளையும்(சனிக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், 24(நாளை மறுதினம்) மற்றும் 25 (திங்கட்கிழமை) -ந்தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 25-ந்தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com