இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு... வடகிழக்கு பருவமழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமையும்.
 ஹேமச்சந்தர்
Published on: 

சென்னை:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இயல்பைவிட அதிக மழை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வருகிற அக்டோபர் 20-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை தீவிரமாக இருக்கும். இதில் நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமையும்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ. வரை மழை பதிவாகக்கூடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com