சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com