கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
Published on: 

ஈரோடு,

ஈரோடு -கரூர் பிரிவில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16846) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கரூர் சந்திப்பு ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து ஈரோடு வராது.

எக்ஸ்பிரஸ் ரெயில்

இதேபோல் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) நாளை மறுநாள் கொடுமுடி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும் கோவை சந்திப்பில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322) நாளை மறுநாள் கோவை -திண்டுக்கல் இடையே மாற்று பாதையில் இயக்கப்படும். இந்த இரயில் ஈரோடு வராது என்று சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X