கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்!

பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில், கொடுமுடி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
ரெயில் சேவையில் மாற்றம்!
Published on: 

திருப்பூர்,

ஈரோடு - கரூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், பாலக்காடு-திருச்சி ரெயில் இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட்டு கொடுமுடி மற்றும் கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புகழூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு. இந்த ரெயில் புகழூரில் இருந்து திருச்சி சந்திப்பு வரை, விரைவு ரெயிலின் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

இதுபோல் வருகிற 24, 27, 29 மற்றும் 31-ந் தேதிகளில் காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில், கொடுமுடி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு. இந்த ரெயில் கொடுமுடியில் இருந்து திருச்சி வரை, விரைவு ரெயிலின் அதே நிறுத்தங்களுடன் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

இன்று (வியாழக்கிழமை) மற்றும் 24, 27, 29, 31-ந் தேதிகளில் காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய கோவை-நாகர்கோவில் ரெயில், கோவை-திண்டுக்கல் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக இயக்கப்படும்.

இதன் காரணமாக, இந்த ரெயில் கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகழூர், கரூர் மற்றும் எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வராது. பயணிகளின் வசதிக்காக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com