பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்...!

பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்...!
Published on

சென்னை,

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்: 43892) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:43799) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -திருவள்ளூ இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:43255) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -திருவள்ளூ இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:66007) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com