சென்னையில் 22 போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - காவல் ஆணையர் நடவடிக்கை

போலீசார் சிலர் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னையில் 22 போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் - காவல் ஆணையர் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சிலர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் என மொத்தம் 22 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com