

சென்னை,
கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளம் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) புறப்படும் பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16844) கரூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு, இந்த வண்டி கரூரில் இருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
இதேபோல் கோவை சந்திப்பிலிருந்து நாளை மறுநாள் காலை 8 மணிக்கு புறப்படும் கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16322) கோவை -திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி மற்றும் பழனி வழியாக செல்லும்.
இதன் காரணமாக கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் சாலை, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகலூர், கரூர், பாளையம் மற்றும் எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வராது. எனினும் போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தங்கள் வழங்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.