விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா

விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா
Published on

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் வளர்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அருகம்புல் சாற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள வல்லபை கணபதி, புகழிமலை அடி

வாரத்தில் உள்ள விநாயகர், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர், அய்யப்பன் கோவில் விநாயகர், ஈ.ஐ.டி பாரி கற்பக விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com