களக்காடு கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

களக்காடு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
களக்காடு கடைகளில் சோதனை; பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Published on

களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட வியாசராஜபுரம், தம்பிதோப்பு, கீழ கருவேலங்குளம், சேரன்மாதேவி மெயின் ரோடு, பழைய பஸ்நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் (பொறுப்பு) அறிவுறுத்தலின் பேரில், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் மேற்பார்வையாளர் வேலு மற்றும் நகராட்சி பணியாளர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 32 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 8 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com