செங்கல்பட்டு: ஆகஸ்டு 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 29-ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு
Published on

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆகஸ்டு 14-ல் உள்ளூர் விடுமுறையை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூரத் திருவிழா நடைபெறவுள்ளது.

உள்ளூர் விடுமுறை

இந்த நிலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி, வருகிற 28-ந்தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 29-ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com