

சென்னை,
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களில் 50 பேருக்கு 50 கார்களை பரிசளித்துள்ளது. ஊழியர்கள் தாங்கள் விரும்பிய காரை தேர்ந்தெடுக்கும்படி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். இதையடுத்து, ஊழியர்கள் விரும்பிய கார் விவரங்களை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக ஊழியர்கள் 50 பேருக்கு விரும்பிய கார்களை நிறுவன தலைவர் வாங்கிக்கொடுத்தார்.
தங்களது 38 ஊழியர்களுக்கு நிறுவனத்தின் 33 சதவீத பங்குகளையும் ஒதுக்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் மாற்றி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இதேபோல கடந்த ஆண்டும் 100 ஊழியர்களுக்கு கார்களை இந்நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.