சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சென்னை விமான நிலையம்
Published on

சென்னை,

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் 2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள் 2023-ல் நிறைவடைந்து, ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகளை கையாளும் புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது 2-ம் கட்டமாக, ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை விமான நிலையம்

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி முரளிதர மகாலி, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை விமான நிலைய உள்கட்டமைப்புக்காக ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 2022-23 முதல் பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் சென்னை விமான நிலையம் தொடர்ந்து நாட்டின் 5-வது பரபரப்பான விமான நிலையமாக இருப்பதாகவும், விமான நேர ஒதுக்கீட்டில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் ரூ.80 கோடியில் கட்டப்படும் புதிய ஏ.டி.சி. கோபுரப் பணிகள் 76 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் ரூ.51 கோடியில் எல்லைச் சுவர் மற்றும் ரூ.14 கோடியில் முனையக் கட்டிட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com