சென்னை விமான நிலையம்; தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது - வன்னி அரசு பேட்டி

பட்டியலின மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு என அமைச்சர் வன்னி அரசு கூறினார்.
விஜய்
சென்னை விமான நிலையம்
Published on

விழுப்புரம்,

சென்னை விமான நிலையம் தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில்

விழுப்புரத்தில் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டவுடன், அன்றே சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி தனியாருக்குத்தான் தாரை வார்க்கப்பட்டுள்ளது, அப்பொழுதே விசிக எதிர்ப்பு தெரிவித்தோம். கொள்கை அடிப்படையில் தனியாருக்கு தாரை வார்ப்பதை விசிக ஏற்காது. தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

திமுக அரசியல் செய்கிறது

மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகதான் அரசியல் செய்கிறது.

உண்மையில் திமுகவுக்கு பட்டியலின மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டத்தில் 601 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 153 பேருக்குதான் கொடுத்திருக்கிறார்கள். மீதியுள்ள மாணவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறார்கள்.

வேங்கைவயல்

வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டது திமுகதான். அதில் பாதிக்கப்பட்ட ஒரு காவலர் என்னிடம் வந்து புகார் தெரிவித்தார். எங்களுடைய தலைவர் திருமாவளவன், அப்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் சென்று இதுபற்றி கேள்வி எழுப்பினார். பட்டியலின மாணவர்கள், இளைஞர்களுக்கு மிக மோசமாக வஞ்சகம் செய்த அரசு திமுக அரசு. வேங்கைவயல் விவகாரத்தில் திமுக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com